‘வெற்றிக்கொடி’யை படிக்கும் போது குழந்தையை தாய் பார்க்கும் ஆனந்தம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியை நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

இந்து தமிழ் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக வெளிவந்துள்ள "வெற்றிக்கொடி" நாளிதழைப் பார்க்கும் போது குழந்தையை தாய் பார்க்கும் ஆனந்தம் ஏற்படுகிறது என்று அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பயனுள்ள தகவல்கள் வெற்றிக்கொடி நாளிதழ் குறித்து காஞ்சிபுரம் ஊத்துக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலாவல்லி அருள் கூறும்போது, கடந்த 5 ஆண்டுகளாக தலைமையாசிரியையாகப் பணியாற்றி வருகிறேன்.

ஆசிரியர் பணியில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். இந்துதமிழ் நாளிதழின் "வெற்றிக்கொடி"யை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

ஏனென்றால் வெற்றிக கொடியில் வருகின்ற தகவல்கள் மாணவர்களை உளவியல் ரீதியாக எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர்களை மேம்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. விஜயதசமி அன்று தொடங்கப்பட்ட வெற்றிக்கொடி மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

ஒரு தாய் தனது குழந்தையை பார்க்கும்போது எவ்வாறு ஆனந்தம் அடைவாளோ அதுபோல ஆசிரியர்களுக்கும் வெற்றிக்கொடி ஆனந்தத்தை கொடுக்eகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்