விஜயதசமியில் களைகட்டிய மாணவர் சேர்க்கை

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் விஜயதசமி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளின் சுட்டு விரலைப்பிடித்து, தட்டில் பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுதகற்றுக் கொடுப்பார்கள்.

இந்நிகழ்ச்சியை ‘வித்யாரம்பம்’ என்று அழைக்கிறார்கள். பெற்றோர் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினத்தன்றுபள்ளியில் சேர்க்க விரும்புவார்கள். அந்த வகையில், விஜயதசமி நாளானசெவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும்ஏராளமான பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

தனியார் பள்ளிகளில் பிரிகேஜி, எல்கேஜி மற்றும் முதல் வகுப்புகளில் ஏராளமான குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். அரசு பள்ளிகளில், மாணவர்சேர்க்கையை உயர்த்தும் வகையில், விஜயதசமி நாளில், புதிய மாணவர்களை சேர்க்கைக்கு அனைத்து தொடக்கப்பள்ளிகளையும் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் சேதுராம வர்மா ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, விஜயதசமியை முன்னிட்டு தனியார் பள்ளிகளைப் போன்று அரசு பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட நர்சரிங் பள்ளிகளில் பிரிகேஜி, எல்கேஜி வகுப்புகளிலும் தொடக்கப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும் ஏராளமான குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்