இந்தியாவின் ஏற்றுமதி தடை எதிரொலி; சாப்பாட்டில் வெங்காயத்தை சேர்க்காதீர்கள்: வங்கதேச பிரதமர் ஹசீனா வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

இந்தியாவில் வெங்காய விலை உயர்வை தடுக்க, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவின் ஏற்றுமதி தடையால் அண்டை நாடான வங்கதேசத்தின் சமையலறைகள் பாதித்துள்ளன.

வங்கதேசத்தில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு அதிகரித்துவிட்டது. இதனால், ‘‘சாப்பாட்டில் வெங்காயத்தை சில காலத்துக்கு சேர்க்காதீர்கள்’’ என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தன் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஹசீனா கூறும்போது, “நீங்கள் (இந்தியா) வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியது ஏன் என்று தெரியவில்லை. திடீரென நீங்கள் நிறுத்தியது எங்களுக்கு நெருக்கடியாகிவிட்டது. அதனால் உணவில் வெங்காயம் சேர்க்க வேண்டாம் என்று என் சமையல்காரரிடம் சொல்லிவிட்டேன். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதாக இருந்தால் முன்பே தகவல் சொல்வது எங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80/-வரை உயர்ந்தது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் விலை குறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்