தூய்மையை வலியுறுத்தும் ஆங்கில வடிவமைப்பு: மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, "தூய்மையான சென்னை" என்பதை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மிதிவண்டிப் பயணத்தில் கலந்து கொண்டவர்கள் நேற்று உருவாக்கிய "Litter free Chennai" என்ற தோற்றத்தில் மேயர் ஆர். பிரியா கலந்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து மிதிவண்டிப் பயணத்தில் அதிக நபர்களை பங்குபெற செய்த WE ARE THE CHENNAI CYCLIST GROUP என்றகுழுவின் தலைவர் பெலிக்ஸ் ஜான்மற்றும் இந்து குழும பிரதிநிதிகளுக்கு பதக்கங்களை மேயர் வழங்கினார்.

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22-ம்நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப் பெற்ற ஒரு சிறப்புமிக்கநாளாகும். இந்நாள் 2004-ம்ஆண்டில் இருந்து நினைவுகூரப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் ஆகஸ்ட் 22-ம் நாளன்றுசென்னை தினக் கொண்டாட்டத்தின் ஆரம்பமாக புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்தொடர்ச்சியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புகைப்படக் கண்காட்சி, இசைக் கச்சேரி, கடற்கரையில் திரைப்படங்கள் காட்சி படுத்துதல், மாரத்தான், உணவுத் திருவிழா, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குதிரை வண்டி சவாரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக, தூய்மையான சென்னை என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் நேற்று நான்குஇடங்களில் நடைபெற்ற மிதிவண்டிப் பயணத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பயணம், ஈ.சி.ஆர். வி.ஜி.பி., கத்திப்பாரா அர்பன்ஸ்கொயர், அண்ணாநகர் டவர் பூங்கா, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம்ஆகிய இடங்களில் தொடங்கி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இந்து குழும நிர்வாகிகள், மிதிவண்டி பயணத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்