விண்வெளி ஆய்வில் சீனாவுக்கு போட்டி இந்தியா: அமெரிக்காவின் பிரபல ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் கணிப்பு

By செய்திப்பிரிவு

‘விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவெடுக்கும்’ என்று அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல நாளிதழான ‘நியூயாா்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் ‘உலகின் விண்வெளி வா்த்தகத்தில் ஆச்சரியத்துக்குரிய வளா்ச்சி’ என்ற தலைப்பிலான கட்டுரையில் கூறி யிருப்பதாவது:

இந்தியா தனது முதல் ராக்கெட்டை 1963-ல் விண்வெளிக்கு ஏவும்போது, உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஏழை நாடாக இருந்தது.விண்ணில் ஏவப்பட்ட அந்த ராக்கெட்டின் கூம்புமுனைப் பகுதி சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்டது. அந்த ராக்கெட்டில்அ னுப்பப்பட்ட சிறிய செயற்கைக்கோள், பூமிக்கு மேல் 124 மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.

ஆனால், இன்றைக்கு விண்வெளித் துறையில் இந்தியா அபார வளா்ச்சி பெற்றுள்ளது. பதிவு செய்யப்பட்ட விண்வெளித்தொழில்நுட்பம் சாா்ந்த 140 புத்தாக்கநிறுவனங்களை இந்தியா கொண்டுள்ளது. விண்வெளியின் இறுதி எல்லை வரைதொடா்பை ஏற்படுத்தும் அளவிலான உள்நாட்டு ஆராய்ச்சி மையத்தைக் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் அழைப் பின்பேரில் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா வந்தபோது, விண்வெளித் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தி புதிய உச்சத்தை எட்டுவதற்கான பாதையை இரு தலைவா்களும் வகுத்துள்ளனா்.

விண்வெளித் துறையில் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா உருவெடுக்கும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதில் புவிசாா் அரசியல் சூழல் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

ரஷ்யாவும், சீனாவும் தங்களுடையராக்கெட்டுகள் மூலமாக குறைந்த விலையில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான வாய்ப்புகளை உலக நாடுகளுக்கு அளித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான போா், விண்வெளித் துறையில் ரஷ்யா போட்டியாளராக இருந்த நிலைமையை மாற்றியுள்ளது.

இதன் காரணமாக, ரஷ்யாவின் உதவியுடன் இதுவரை செயற்கைக் கோள்களை ஏவி வந்த பிரிட்டனின் புத்தாக்க நிறுவனமான ‘ஒன் வெப்’, தற்போது இந்தியாவின் இஸ்ரோ மூலமாக செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

அதுபோல, அமெரிக்க நிறுவனங்கள் சீனாவின் உதவியுடன் அல்லாமல், இந்தியாவின் இஸ்ரோ மூலமாக ராணுவப் பாதுகாப்பு தொழில்நுட்பம் சாா்ந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

30 mins ago

இலக்கியம்

7 hours ago

சினிமா

11 mins ago

இலக்கியம்

7 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

54 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்