ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? ஓரளவு மகிழ்ச்சி அப்பா!

By செய்திப்பிரிவு

​ஜி.எஸ்.எஸ்.

ஒரு வீட்டில் அப்பாவும் மகனும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உரையாடலின் ஒரு பகுதி இது.

Father – I saw your progress report. Are you happy with your marks?
Son – I am happy also.
Father – Can’t you get more marks?
Son – Yes. I can. In my next examination, I will get inside ten ranks.
Father – OK. Knowing the subject is more important than getting a good rank. Concentrate on your studies.
Son – Yes father. I will put more concentration.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள். மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

‘’நீ பெற்றுள்ள மதிப்பெண்களில் உனக்கு மகிழ்ச்சியா?’’ என்று அப்பா கேட்கும்போது கொஞ்சம் சங்கடத்துடன் ‘’happy also” என்று கூறுகிறான் மகன். அதாவது ஓரளவு மகிழ்ச்சி என்று கூற நினைக்கிறான்.

இதற்கு அவன் somewhat happy என்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கலாம்.‘’பத்து ரேங்குக்குள் வருவேன்’’ என்று தமிழில் கூறுவதுண்டு. ஆனால், அதை அப்படியே I will get inside ten ranks என்று மொழி பெயர்க்கக் கூடாது. I will be within ten ranks என்று கூறலாம்.

அதிக கவனம் செலுத்துவது என்பதை put more concentration என்கிறான் மகன். இதற்குப் பதிலாக paymore attention என்று அவன் கூறியிருக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்