மொழிபெயர்ப்பு: பருவநிலை மாற்றத்துக்கு காரணம் சொல்கிறது சனிக்கோளின் நிலவு டைட்டன்

By செய்திப்பிரிவு

Saturn's moon may help decode climate change on Earth: Study

Houston, Dec 6 (PTI)

Researchers have found that Saturn's largest moon Titan undergoes significant seasonal changes in its energy budget -- the amount of solar energy it absorbs, and the the heat it emits -- an advance that may lead to new insights about climate fluctuations on the Earth.

The study noted that Titan is the only body in the solar system, other than Earth, with a significant atmosphere and liquid surface lakes.

Titan's dynamically-varying energy budget has important impacts on its weather and climate systems.
Both the moon's emitted thermal energy and absorbed solar energy decreased over the 14-year period, the study noted.

While there are some parallels that could be drawn to study similar effects on the Earth, the researchers said our planet and Titan also differed drastically in several ways.
The researchers said the surface liquid on Titan is liquid methane, rather than water, for example, and explained that it takes Saturn and its moons far longer to complete an orbit around the Sun.
It takes Saturn about 29 Earth years to complete its orbit, said Liming Li, a physics professor at UH and corresponding author on the paper.

Still, the researchers said, learning more about the energy budget of Titan can add to understanding of climate change on Earth.

"Earth's small energy imbalance has significant effects on its global warming and climate change," Liming said. - PTI

பருவநிலை மாற்றத்துக்கு காரணம் சொல்கிறது சனிக்கோளின் நிலவு டைட்டன்

ஹூஸ்டன்:

சனிக்கோளின் நிலவுகளில் மிகப் பெரியது டைட்டன். அது பல்வேறு பருவகால மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலவு சூரிய ஆற்றலை உள்வாங்கி வெளியிடும் வெப்பத்தை அளவுகோலாக வைத்து பூமியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பருவநிலை மாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறியலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் பூமியைத்தவிர கணிசமான வளிமண்டலமும் திரவ நிலைகளும் கொண்டது டைட்டன் நிலவு மட்டுமே. இந்த டைட்டன்நிலவில் நிகழ்ந்து வரும் சக்திவாய்ந்த மாற்றங்கள் வானிலை மற்றும் பருவநிலை அமைப்பில் குறிப்பிடத்
தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

டைட்டன் நிலவு வெளியிடும் வெப்பமும் அது உள்ளிழுத்துக் கொள்ளும் சூரிய ஆற்றலும் கடந்த 14 ஆண்டுகளாகக் குறைந்து கொண்டே வருகிறது.

இதே போன்ற தாக்கங்கள் பூமியில் காணப்பட்டாலும் நம்முடைய பூமிக்கும் டைட்டனுக்கும் இடையில் பாரதூரமான வேறுபாடு உள்ளது. உதாரணத்துக்கு, டைட்டனில் உள்ள திரவம் தண்ணீர் அல்ல. அது திரவநிலையில் இருக்கும் மீத்தேன். அதே போன்று சூரியனைச்சுற்றிவரப் பூமியைக் காட்டிலும் சனிக்கோளுக்கும் அதன்நிலவுகளுக்கும் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. அந்த வகையில் தன்னுடைய வட்டப் பாதையைச் சுற்றிவர சனிக்கோளுக்கு கிட்டத்தட்ட 20 புவி ஆண்டுகள் தேவைப்படுகிறது என்கிறார் அமெரிக்காவின் ஹூஸ்டன்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியரும் இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியருமான லீமிங் லீ.

சனிக்கோள் தொடர்பாக ஏற்கெனவே இது போன்றஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதும் தற்போது நடத்தப்பட்டுவரும் இந்த ஆய்வு பூமியின் பருவநிலை மாற்றத்தின் மீது டைட்டன் ஏற்படுத்திவரும் தாக்கத்தை மேற்கொண்டு புரிந்துகொள்ள உதவும்.

“பூமியில் ஏற்படும் சிறிய ஆற்றல் தடுமாற்றம்கூட புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றத்தில் கணிசமான தக்கத்தை ஏற்படுத்த வல்லது” என்றார் லீமிங்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

50 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

58 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்