அறிந்ததும் அறியாததும்: எப்போது ‘The’ பயன்படுத்துவது?

By செய்திப்பிரிவு

ஆங்கிலத்தில் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படும் சொல், ‘the’. இதை definite article என்கிறார்கள். இதை எப்போதெல்லாம் பயன்படுத்தலாம் என்ற குழப்பம் எழுவது சகஜம். எப்போது ‘The’ என்ற சொல் ஒரு தொடரில் இடம்பெறும் என்பதைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்!

1. பெயர்ச்சொல் ஒன்று வாக்கியத்தில் எழுதப்பட்ட பிறகு அதே விஷயத்தைக் குறிப்பிட வேண்டுமானால் அங்கு ‘The’ பயன்படுத்த வேண்டும்.

உதாரணத்துக்கு, This is a cat. The cat is brown in colour.

இது ஒரு பூனை. இந்த பூனை பழுப்பு நிறத்தில் உள்ளது.

முதல் வாக்கியத்தில் ஏதோ ஒரு புனையை சுட்டிக்காட்டும்போது அங்கு ‘The’ தேவையில்லை. பிறகு இரண்டாம் வாக்கியத்தில் ஏற்கெனவே பேசிய அதே பூனையைப் பற்றிப் பேசுவதால் ‘The cat’ என்றெழுத வேண்டும்.

2. நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பது அடுத்தவருக்குத் தெளிவாக தெரிந்திருக்கும்போது ‘The’ பயன்படுத்த வேண்டும்.
உதாரணத்துக்கு,

I am going to the school mom.

நான் பள்ளிக்குச் செல்கிறேன் அம்மா.

நீங்கள் எந்த பள்ளியில் படிக்கிறீர்கள் என்பது உங்களுடைய தாய்க்கு தெரிந்திருக்குமல்லவா. அப்போது நீங்கள் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டு சொல்ல மாட்டீர்கள். அதற்குப் பதிலாக பள்ளிக்குச் செல்கிறேன் என்று மட்டும் சொல்வீர்கள். ஆங்கிலத்தில் இதைச் சொல்லும்போது the school என்று குறிப்பிட வேண்டும்.

* There is someone knocking the door. It must be the plumber. I called him to come and fix the tap.
யாரோ வீட்டின் கதவைத் தட்டுகிறார்கள். குழாய்பழுதுபார்ப்பவராகத்தான் இருக்க வேண்டும்.

குழாய் ஒழுகுவதால் அதை சரிபார்க்க நான் அவரை அழைத்திருந்தேன்.

மேலே இடம்பெற்றுள்ள வாக்கியங்களில் மூன்று முறை ‘The’ எழுதப்பட்டிருக்கிறது. ஏனென்றால் உங்களுடைய வீட்டின் கதவு, அழைக்கப்பட்ட குழாய் பழுதுபார்ப்பவர் மற்றும் உங்கள் வீட்டுக் குழாய் இவை அனைத்தும் உங்களுக்கு தெரிந்தவையே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

26 mins ago

உலகம்

36 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்