புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் புதிய இளங்கலை, முதுகலை படிப்புகள் அறிமுகம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் புதிய முதுகலை மற்றும் இளங்கலை படிப்புகள் இக்கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

புதுவை பொறியியல் கல்லூரியில் இயங்கும் 8 துறைகளில் பல்வேறு முதுகலை படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது புதிய படிப்புகள் தொடங்கப்பட்டது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் கோதண்டராமன் கூறியதாவது:

''நடப்பு கல்வி ஆண்டு கணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் சார்பாக இரண்டு புதிய முதுகலை (எம்.டெக்.) படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டேட்டா சயின்ஸ் (Data Science) மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (Internet of Things) என்னும் இந்த இரண்டு படிப்புகளுக்கு அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலும் (AICTE) புதுவை பல்கலைக்கழகமும் அனுமதி அளித்துள்ளன.

இந்த இரண்டு படிப்புகளும் தற்போது நடத்தப்படும் டிஸ்ட்ரிப்யூட்டெட் கம்ப்யூட்டிங் சிஸ்டம் (M.Tech. Distributed Computing System) மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (M.Tech. Information Technology) ஆகிய படிப்புகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு புதிய பிரிவுகளுடன் ஏற்கெனவே நடைபெற்று வரும் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி (M.Tech. Information Security) பிரிவும் தொடர்ந்து நடத்தப்படும்.

புதுவை பொறியியல் கல்லூரியின் 35 வருட வரலாற்றில் முதன் முறையாக இந்தக் கல்வியாண்டில் முதுகலை மேலாண்மைப் படிப்பு (MBA) அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கு ஏதுவாக இந்த மேலாண்மைப் படிப்பு இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. (MBA – Innovation, Entrepreneurship and Venture Development)

ஏஐசிடிஇ உடைய புதிய முடிவின் படி எம்சிஏ படிப்பு இந்த ஆண்டு முதல் இரண்டு வருட காலமாக (நான்கு பருவங்கள்) குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி மேற்படிப்பிற்கான வாய்ப்புகளைத் தரும் மேற்குறிப்பிட்ட புதிய பிரிவுகள் உள்ளடக்கிய 11 எம்.டெக். பிரிவுகள் மற்றும் எம்எஸ்சி, எம்.பில். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தகுதியுடைய மாணவர்களிடம் இருந்து ஆகஸ்டு 10-ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களை கல்லூரியின் இணையதள முகவரியில் (http://www.pec.edu) காணலாம்.

சிறப்பம்சமாக இந்த வருடம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் கூடுதலாக மெக்கட்ரானிக்ஸ் (B.Tech. Mechatronics) இளங்கலை படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.''

இவ்வாறு முதல்வர் கோதண்டராமன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்