ஆன்லைனிலேயே முழு செமஸ்டர் வகுப்புகள்: பஞ்சாப் பொறியியல் கல்லூரி முடிவு

By செய்திப்பிரிவு

ஆன்லைனிலேயே செமஸ்டர் வகுப்புகளை நடத்தி, தேர்வுகளையும் முடிக்க சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரி முடிவு செய்துள்ளது.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில், அடுத்த செமஸ்டர் முழுவதையும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலையில் தொடங்க உள்ள வகுப்புகளை அடுத்துத் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளன. ஏற்கெனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட உரைகள் மற்றும் நேரடிக் கற்பித்தல் நிகழ்வு மூலம் வகுப்புகள் நடைபெறும்.

இதுகுறித்துக் கல்லூரி இயக்குநர் தீரஜ் சங்கி கூறும்போது, ''அனைத்து ஆசிரியர்களுடன் மெய்நிகர் சந்திப்பு மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்களுடன் ஆலோசனைகளை நடத்தினோம். அதைத் தொடர்ந்து ஆன்லைனிலேயே கற்பித்தல் என்னும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்தே, சூழல் எப்படி இருக்கும் என்று ஊகித்து இதை வரையறை செய்தோம். ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே, கல்லூரியில் படிக்கும் 3,300 மாணவர்களைக் கொண்டு வகுப்பை எடுப்பது நவம்பர் மாதம் வரை சாத்தியம் அற்றது என்று உணர்ந்தோம். அதைத் தொடர்ந்தே ‘ஆன்லைன் செமஸ்டர்’ எனும் முடிவுக்கு வந்தோம்.

ஏற்கெனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட உரைகள் மற்றும் நேரடிக் கற்பித்தல் நிகழ்வு மூலம் வகுப்புகள் நடைபெறும். ஆய்வக வகுப்புகளை மட்டும் சுழற்சி முறையில் கல்லூரி வளாகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

வளாகத்தில் கற்பதே சிறந்த முறையாக இருக்கும் என்ற போதிலும் தவிர்க்க முடியாத சூழலில் ஆன்லைன் கல்வியை நோக்கிப் பயணிக்கிறோம். ஆன்லைன் கற்பித்தலுக்காக எங்களின் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்க முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்