ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்?- ஏன் தாமதம்?

By செய்திப்பிரிவு

ஜி.எஸ்.எஸ்.

பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறாள் ராஜி. அப்போது அங்கு வந்து சேருகிறாள் மீனா. இருவருமே வெவ்வேறு பள்ளிகளில் படிப்பவர்கள். அவர்களது உரையாடலின்ஒரு பகுதி இது.

Raji – What is the exact time?

Meena – It is almost eight.

Raji – My God! I will be late for school.

Meena – Why the delay?

Raji – I waked up late.

Meena – Why?

Raji – I slept very late yesterday night.

Meena – So what was your lessen?

Raji – I should sleep early and get early.

மேலே உள்ள உரையாடலைப் படத்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்தஉரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளை பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

It is almost eight என்பது தோராயமான ஒரு பதில். கேள்வி what is the exact time என்பதால், it is two minutes to eight என்பதுபோல் விடை இருந்திருக்கலாம்.

ராஜி ‘I waked up late’ என்கிறாள். Wake என்பதன் past tense woke என்பதுதான். எனவே I woke up late என்று அவள் கூறியிருக்க வேண்டும்.

முன்னிரவில் தாமதமாகத் தூங்கியதால் இன்று தாமதமாக எழுந்ததாக ராஜி கூறும்போது, so what was your lessen? என்று மீனா கேட்கிறாள். அதாவது இதன் மூலம் நீ எந்தப் பாடத்தைக் கற்றாய் என்ற பொருளில் கேட்கிறாள். அவள் lesson என்பதைத்தான் குறிப்பிடுகிறாள். பாடம் என்றால் lesson. Lessen என்றால் ஒன்றின் அளவைக் குறைப்பது என்று பொருள்.

இறுதியில் ராஜி I should sleep early and get early என்கிறாள். Get என்றால் எதையோ அடைவது. ரா​​ஜி கூறியிருக்க வேண்டிய வாக்கியம் I should sleep early and get up early என்பதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

22 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்