கோவையில் இருந்து ரயிலில் திருப்பதிக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்யலாம்

By செய்திப்பிரிவு

கோவை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் செவ்வாய்க் கிழமைகளில் கோவையில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தின் கீழ் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திருப்பதி பாலாஜி தரிசன சுற்றுலா திட்டத்தின்கீழ், ஓர் இரவு, 2 நாட்கள் கொண்ட சுற்றுலாவில் திருமலை, காள ஹஸ்தி கோயில், பத்மாவதி கோயில் ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்கலாம். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு ரூ.4,580, ஏசி சேர் காருக்கு ரூ.7,200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், எது தங்களுக்கு விருப்பமோ அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். மொத்த கட்டணத்தில் பயண காப்பீடு, சுற்றுலா வழிகாட்டி, தரிசன டிக்கெட் கட்டணம், ஹோட்டலில் ஏசி அறையில் தங்கும் வசதி, முதல் நாள் இரவு உணவு, மறுநாள் காலை சிற்றுண்டி, வாகன வசதி உள்ளிட்டவை அடங்கும்.

வரும் பிப்ரவரி 7, 14, மார்ச் 7,14, 28 ஆகிய தேதிகளில் முன்பதிவுக்கு 9003140655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

45 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்