குடிமைப் பணி அதிகாரிகள் நிமிர்ந்து நடைபோட வேண்டும் : பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

By செய்திப்பிரிவு

குடிமைப்பணித் தேர்வில் 2020-21ஆண்டில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கான பாராட்டு விழா, சென்னை அண்ணா மேலாண்மை மையத்தில் நேற்று நடந்தது. தேர்ச்சி பெற்ற 26 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மாற்றுத்திறனாளி தேர்வர் ஒருவருக்கு துறைசார்பில் அளிக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் நிதியையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்வர் பேசியபோது, ‘‘தற்போது பாராட்டு பெறுபவர்களில், பெண்களில் 7 பேரும், ஆண்களில் 9 பேரும் அண்ணா மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இவர்களில் ஒருவர் மாற்றுத் திறனாளி.பணியில் இருக்கும்போது எந்தவிதமான சபலத்துக்கும் ஆட்படாமல் நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நடைபோட வேண்டியது உங்கள் கடமை. மக்களை நேசிப்பது மிகவும் முக்கியம்’’ என்றார்.

நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி கே.ராஜேந்திரன், பொதுத் துறை செயலர் டி.ஜகந்நாதன் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்