மக்கள் மகிழ்ச்சியாக வாழ - தமிழகத்தில் மதுக்கடைகள் கட்டாயம் மூடப்பட வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழகம் முன்னேறி, மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம்பட்டியை சேர்ந்த மின்வாரியப் பணியாளர் இளையராஜா, மதுவுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் எழுதி வைத்துள்ளகடிதத்தில், ‘குடி குடியைக் கெடுக்கும் என்பதால் எவரும் மதுவுக்குஅடிமையாகி சீரழியாதீர்கள்’ என்று மன்றாடியுள்ளார்.

மதுவுக்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்துகொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பலவிதமான புற்றுநோய்கள், கல்லீரல் அழற்சி, மாரடைப்பு உள்ளிட்ட 200 வகையான நோய்களுக்கு ஆளாவதாக உலகசுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

37% தமிழக இளைஞர்கள்

தமிழக இளைஞர்களில் 37 சதவீதத்தினர் மதுப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். மதுப் பழக்கம் உள்ள இளைஞர்களில் 75 சதவீதம் பேர் 21 வயதுக்கு முன்பே மது குடிக்கத் தொடங்கியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சட்டப்பூர்வமாக மது அருந்துவதற்கான வயது 21 எனும்போது அதற்கு முன்பே 75 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமை ஆகின்றனர் என்றால் தமிழகத்தில் மது விற்பனை விதிகள் மதிக்கப்படவில்லை என்றுதான் பொருள்.

பல்லாயிரக்கணக்கான இளம்பெண்கள் கைம்பெண்கள் ஆவதற்கும், குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறுவதற்கும் மதுதான்காரணமாக உள்ளது. பெரும்பாலான கொள்ளைகள், திருட்டு,வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கும் மதுவே முதன்மைக் காரணம்.

மக்களுக்கு செய்யும் துரோகம்

இவ்வளவு சமூகத் தீமைகளுக்கும், சீரழிவுகளுக்கும் காரணமான மது வணிகத்தை, அதில் இருந்து கிடைக்கும் வருமானத்துக்காக தொடர்வது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

தமிழகம் முன்னேற வேண்டுமானால், மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால் மதுக்கடைகள் கட்டாயம் மூடப்பட வேண்டும்.குறிப்பிட்ட காலவரையறைக்குள்மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மது போதைக்குஅடிமையானவர்களை மீட்க தமிழகம் முழுவதும் போதை மீட்புசிறப்பு மையங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

46 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

42 mins ago

சுற்றுச்சூழல்

58 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்