கருப்பு பூஞ்சை நோயால் 4 ஆயிரம் பேர் பாதிப்பு : சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் முடிதிருத்துவோர், ஆட்டோ ஓட்டுநர்களுக்கானகரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசிடம் இருந்து இதுவரை 1 கோடியே 77 லட்சத்து31,670 தடுப்பூசிகள் வந்துள்ளன. 1 கோடியே 73 லட்சத்து 20,774 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கையிருப்பில் 7 லட்சத்து 77,910 தடுப்பூசிகள் உள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடர்பான கூட்டம் காணொலி மூலம் இன்று (16-ம் தேதி) நடந்தது.

இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கரோனா 3-வது அலை அதிகபாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், உயிரிழப்பு குறைவாக உள்ளது. இறப்பு குறைவாக இருப்பதற்கு, தடுப்பூசி போட்டுக் கொண்டதுதான் முக்கிய காரணம்.

தமிழகத்தில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 4 ஆயிரம் பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு வந்தால் இதில் இருந்து எளிதாக குணமடையலாம். கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை மத்திய அரசு அனுப்பிஉள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்