பிளஸ் 2 தேர்வு ரத்துக்கு விஜயகாந்த், வாசன் வரவேற்பு :

By செய்திப்பிரிவு

தமிழக அரசு பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஜயகாந்த்: பிளஸ் 2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது. இதன்மூலம் மாணவர்கள், பெற்றோரிடையே நீடித்து வந்த குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கரோனா காலகட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவான முடிவுஎடுத்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது.

ஜி.கே.வாசன்: பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து என்று தமிழக அரசுஅறிவித்திருப்பது பெரும்பாலானபெற்றோர் மற்றும் மாணவர்களுடைய மனநிலையை பிரதிபலிக்கிறது. இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் என்பது வருங்கால மாணவர்களின் வழிகாட்டி. அவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. தற்பொழுது மாணவர்களுக்கு நல்வழிக்காட்டக் கூடிய பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் தமிழக அரசுஅமைக்கவிருக்கும் குழு, துல்லியமாக மதிப்பெண்களை மதிப்பிட்டு மாணவர்களின் வருங்கால கனவை நினைவாக்க உத்தரவாதம் கொடுக்கும் வகையில் முடிவுஎடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்