எஸ்ஆர்எம் பி.டெக் பொறியியல் பட்டப் படிப்பில் சேர 2-ம் கட்ட - நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி :

By செய்திப்பிரிவு

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேர 2-ம் கட்ட நுழைவுத் தேர்வு (SRMJEEE) இம்மாதம் 29, 30ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் பல்வேறுபி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு 2-ம் கட்டமாக கணினி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 2-ம்கட்ட நுழைவுத் தேர்வு இம்மாதம்29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் www.srmist.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்தமாதம் 20-ம் தேதி கடைசி நாளாகும். சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு வந்து வளாக தேர்வு மூலம் நல்ல ஊதியத்துடன் தேர்வு செய்து வருகின்றன. இந்த ஆண்டு (2020-21) 560-க்கும் அதிகமான நிறுவனங்கள் நடத்திய வளாக பணியாளர் தேர்வு மூலம் 6,971 மாணவ, மாணவியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேரும் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதுபற்றி மேலும் விவரங்களை www.srmist.edu.in என்ற இணையதளம் மூலம் அறியலாம். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

சினிமா

4 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்