தமிழகத்தில் புதிதாக அரிசி குடும்ப அட்டை பெற்ற - 2.14 லட்சம் பேருக்கும்ரூ.2 ஆயிரம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக அரிசி குடும்ப அட்டை பெற்ற 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 பேருக்கும் ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கரோனா தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களை போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் முதல் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்திருந்தார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்ப் பரவலை கருத்தில்கொண்டு, அதைதடுக்கும் வகையில் தவிர்க்க இயலாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில்பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவவும், ரூ.4,153.39 கோடி செலவில், மே மாதத்தில் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையை முதல் தவணையாக வழங்க ஏற்கெனவே முதல்வர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.43 கோடியில்..

இதைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய அரிசிகுடும்ப அட்டைகளை பெற்றுள்ளவர்களுக்கும் ரூ.42 கோடியே 99 லட்சம் செலவில் மே மாதத்தில் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையை முதல் தவணையாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

49 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்