மூத்த காவல் அதிகாரி மீதான பாலியல் புகார் - விசாகா கமிட்டி அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் :

By செய்திப்பிரிவு

மூத்த காவல் அதிகாரி மீது பெண்எஸ்.பி. பாலியல் புகார் கூறிய விவகாரத்தில் விசாகா கமிட்டியின் முதல்கட்ட விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த மூத்த காவல் அதிகாரி மீது பெண் எஸ்.பி.கொடுத்த பாலியல் புகார் குறித்துசிபிசிஐடி விசாரித்து வருகிறது.இதன் விசாரணை அதிகாரியாகஎஸ்.பி. முத்தரசி நியமிக்கப்பட்டார்.

மூத்த காவல் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்கப்படுத்தல், சட்ட விரோதமாக தடுத்து நிறுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் எஸ்.பி.யை சுங்கச்சாவடியில் வழிமறித்த எஸ்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தமிழக திட்டம், வளர்ச்சித் துறை செயலர் ஜெய ரகுநந்தன் தலைமையில், தலைமையிடஏடிஜிபி சீமா அகர்வால், காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபிஅலுவலக தலைமை நிர்வாகஅதிகாரி வி.கே.ரமேஷ் பாபு, சர்வதேச நீதி அமைப்பின் (ஐஜேஎம்) நிர்வாகி லொரேட்டா ஜோனா ஆகியோரை உறுப்பினர்களாககொண்ட விசாகா கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிட்டி கடந்த மார்ச் 26-ல் விசாரணையை தொடங்கியது. 14சாட்சிகளிடம் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் விசாகா கமிட்டி நேற்று சமர்ப்பித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்