திருமலை நாயக்கர் 438-வது பிறந்த நாள் விழா மதுரையில் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை முன்னாள் தலைமைச் செயலாளரும் மாலை அணிவிப்பு

By செய்திப்பிரிவு

திருமலை நாயக்கரின் 438-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர் பா.ராமமோகன ராவ் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மன்னர் திருமலை நாயக்கரின் 438-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் ராஜூ, மதுரை ஆட்சியர் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையார் ச.விசாகன், எஸ்.எஸ்.சரவணன் எம்எல்ஏ உட்பட பலர் மகால் வளாகத்தில் உள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

நாயுடு மகாஜன சங்கம் சார்பில் குயவர் பாளையம் சாலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு முன்னாள் தலைமைச் செயலாளரும் ஆர்எம்ஆர்.பாசறைத் தலைவருமான பா.ராம மோகன ராவ் தலைமை வகித்தார். திருமலை நாயக்கர் மகாலில் உள்ள நாயக்கர் சிலைக்கு ராம மோகன ராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுபோது, ‘மதுரை மகால் வளாகத்சில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட நாயக்கர் சிலை உள்ளது. இதை வெங்கலச் சிலையாக மாற்ற அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உட்பட பலரும் வலியுறுத்தினர். இதுகுறித்து ஆலோசித்து முதல்வர் பழனிசாமி நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார். வெங்கலச் சிலை விரைவில் நிறுவப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்