பெட்ரோல் நிலையத்தில் டேங்க்கை சுத்தம் செய்தபோது விபத்து; தொழிலாளி மரணம்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் டேங்க் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியில் தென்காசி வட்டம் பாப்பான்குளம் பெரிய தெருவைச் சேர்ந்த ரகு(30) மற்றும் பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்யும் இலுப்பையூரணி தாமஸ் நகரைச் சேர்ந்த ஜஸ்டின் (37) உட்பட 4 பேர் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை டேங்கில் 16 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்டு, அதனை மோட்டார் மூலம் வெளியேற்றினர். டேங்கில் மீதமிருந்த தண்ணீரை வெளியேற்ற தொழிலாளர்கள் உள்ளே இறங்கியபோது, துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து, சிறிய மின்விசிறியை டேங்க்கிற்குள் இறக்கி துர்நாற்றத்தை போக்க முயன்றனர். அப்போது மின்விசிறி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதில், ரகு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஜஸ்டினும் காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரகு மரணமடைந்தார். ஜஸ்டின் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் டேங்க் பகுதியில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

28 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

வணிகம்

35 mins ago

இந்தியா

45 mins ago

க்ரைம்

18 mins ago

சுற்றுலா

5 hours ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்