‘துக்ளக்’ விழாவில் பேசிய விவகாரம் குருமூர்த்தி ஆஜராக நோட்டீஸ் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த 14-ம்தேதி நடந்த ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசியபோது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் என்பதற்கு பதிலாக, நீதிபதிகள் என்று தவறுதலாக கூறிவிட்டதாக அதில் தெரிவித்திருந்தார்.

நீதித் துறை மற்றும் நீதிபதிகள் மீது தான் மிகுந்த மரியாதைவைத்திருப்பதாகவும் தனதுவிளக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அனுமதி கோரி மனு

இந்நிலையில், இந்த விவகாரத்தில் குருமூர்த்திக்கு எதிராக குற்றவியல் ரீதியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி சார்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணைக்கு துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பிப்ரவரி 16-ம் தேதி மாலை 4 மணிக்கு நேரிலோ, அவரது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

44 mins ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்