எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு கோவையில் என்.ஐ.ஏ. சோதனை

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி இரவுப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்(57) துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே அப்துல் ஷமீம், தவுபீக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, சென்னை மண்ணடியைசேர்ந்த கலியத் (எ) சிராஜுதீன் (எ) சிகாப்புதீன்(39) வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி கத்தாரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரது பெற்றோர் கோவை போத்தனூர் அருகேயுள்ள திருமறை நகரில் வசிக்கின்றனர். அவர்களது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். சிகாப்புதீனின் செயல்பாடுகள் குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்த பென் டிரைவ், சிம்கார்டு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்