கேரளா போல தமிழகத்திலும் மின் கட்டணம், கேளிக்கை வரியில் திரைத் துறையினருக்கு சலுகை வழங்க வேண்டும் அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கேரளாவைப் போல தமிழகத்திலும் திரைத் துறையினருக்கு மின் கட்டணம், கேளிக்கை வரியில் சலுகைகள் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, கரோனா பரவலின் தொடக்கத்தில் இருந்தே எல்லா வகையிலும் முழு முனைப்புடன் மக்கள் நலனை காத்து வருவதில் தேவையான அக்கறை செலுத்தி வருகிறது. பேரிடர் காலத்தில், அனைத்து துறைகளும், அனைத்து தொழில்களும் வருமான இழப்பைசந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கான வரிச் சலுகைகளையும், கால அவகாசத்தையும் கேரள அரசு வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில், திரைத்துறைக்கான சலுகைகளையும் கேரள அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதி வரை உள்ளாட்சி கேளிக்கை வரிகள் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. திரையரங்குகள் 50 சதவீதஇருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 மாதங்களுக்கான திரையரங்க மின்கட்டணம் 50 சதவீதம் தள்ளுபடி எனவும் அறிவித்துள்ளது. சொத்து வரி செலுத்தவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரைத்துறையை கனவுத் தொழிற்சாலை என அழைக்கின்றனர். பல ஆயிரம் குடும்பத்தினருக்கு வாழ்வளித்து வந்த திரைத்துறையில் ஏற்பட்டமுடக்கத்தால் அத்துறை சார்ந்தஅனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதை கருத்தில்கொண்டு கேரளஅரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தை பின்பற்றி தமிழகத்திலும் மின் கட்டணம், கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அதிமுக அரசு வழங்க வேண்டும்.

திரைத்துறை மட்டுமின்றி கரோனா பேரிடர் காலத்தில் பாதிப்புக்கு ஆளான அனைத்து தொழில் சார்ந்த குடும்பத்தினரும் தங்கள்வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் இத்தகைய சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்