மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் பொறுப்பேற்றார்

By செய்திப்பிரிவு

மாநில மனித உரிமைகள் ஆணையதலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் நேற்று பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீனாகுமாரி கடந்த 2019 டிச.25-ம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, 2020 பிப்ரவரி மாதம், உறுப்பினர்களில் ஒருவரான டி.ஜெயச்சந்திரன் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டார்.

தேர்வு கூட்டம்

இந்நிலையில், புதிய தலைவரை பரிந்துரைப்பதற்கான தேர்வுக்கூட்டம் கடந்த டிச.26ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், குழு உறுப்பினரான பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்றார். மற்றொருஉறுப்பினரான எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் கூட்டத்தைப் புறக்கணித்தார்.

இதையடுத்து, தேர்வுக் குழுவினர் பரிந்துரையின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து, நேற்று முன்தினம் இதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டது. இதையடுத்து, நீதிபதி பாஸ்கரன் நேற்று பிற்பகல் பொறுப்பேற்றார்.

இவர் 3 ஆண்டுகள் அல்லது70 வயது நிறைவடையும் வரை இப்பதவியில் இருப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்