கொள்ளையர் விட்டு சென்ற காரில் ரூ.90 லட்சம் சிக்கியது ரியல் எஸ்டேட் அதிபரிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்சலாம் (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், கார் ஓட்டுநர் சம்சுதீனுடன்(42), பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கடந்த 25-ம் தேதி சென்றபோது, நவக்கரை அருகே 2 கார்களில் வந்த மர்ம கும்பல் அப்துல்சலாமை கத்தியைக் காட்டி மிரட்டி, கார் மற்றும் ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்துல்சலா|மின் கார், கோவை சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. தடயவியல் துறையினர் காரில் இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். பச்சாபாளையம் அருகே அப்துல்சலாம், சம்சுதீன் ஆகியோரது செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட காரை சோதனையிட்டபோது, காரின் பின் இருக்கை பகுதிக்கு அடியில், ரகசிய அறைகளில் ரூ.90 லட்சம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பணத்துக்குரிய ஆவணங்கள் இல்லாததால், அது ஹவாலா பணமா என்று அப்துல்சலாமிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், கொள்ளைக் கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்