ஜன

By தொகுப்பு: மிது

ஜன.31: அகமதாபாத்தில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டியில், பரோடா அணியை வீழ்த்தி தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி கோப்பையை வென்றது.

பிப்.1: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2021-2022ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். நாடு விடுதலைபெற்று 74 ஆண்டுகளில் காகிதமற்ற பட்ஜெட்டாக இது தாக்கலானது.

பிப்.1: தமிழகத்தின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றார். தலைமைச் செயலாளராக இருந்த கே.சண்முகம் ஓய்வுபெற்றார்.

பிப்.4: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில், குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தமிழக ஆளுநர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் குறிப்பிட்டது. இதன்மூலம் எழுவரை விடுவிக்கும் தமிழக அரசின் 2018-ம் ஆண்டுத் தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்தார்.

பிப்.4: நாட்டின் மிகவும் இளம் வயதில் விமானியான பெண் என்கிற பெருமையை ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லாவைச் சேர்ந்த 25 வயது ஆயிஷா அஜீஸ் பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 mins ago

இந்தியா

11 mins ago

விளையாட்டு

12 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்