மாணவர்களின் வீடுதேடி சென்று போடியில் பாடப்புத்தகம் வழங்கல் :

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இவர்களுக்கு மூன்று பருவங்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. போடி பிச்சாண்டி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பலரும் மலையடிவார கிராமமான சிறைக்காடு பகுதியில் வசித்து வருகின்றனர். எனவே தலைமையாசிரியர் ஜெயக்குமார் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் நேரில் சென்று இவற்றை வழங்கினர்.

தமிழக அரசின் கல்வி சேனல் மூலம் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் கற்று வருகின்றனர். தங்களின் கற்றல் அனுபவம் குறித்து பயிற்சிப் புத்தகங் களிலும் பதிவு செய்து வருகின்றனர்.

தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், கரோனாவினால் பள்ளிகள் மூடப்பட்டாலும், இருந்த இடத்தில் இருந்து கல்வி கற்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளோம். இதற்காக மாணவர்களை தேடி வந்து புத்தகங்கள் வழங்கி உள்ளோம். அடுத்த வாரம் முதல் குறிப்பிட்ட சில தினங்கள் மட்டும் இங்கு நேரில் வந்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாடம் நடத்த உள்ளோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்