பெரம்பலூரில் 1,243 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடியில் நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்

By செய்திப்பிரிவு

பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பல்வேறு துறைகளின் சார்பில் 1,243 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கல்பாடி, பிரம்மதேசம், தேவையூர், பெரிய வடகரை, ஆலம்பாடி ஊராட்சி மன்றங்களுக்கு புதிய கட்டிடங்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்க கட்டிடங்கள் என ரூ.1.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவையை தொடங்கியும் வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிதி வழங்கி கொடி நாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார். மேலும் 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து, கொடி நாள் நிதி அதிகம் வசூல் செய்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனத் தின் சார்பில் வழங்கப்பட்ட ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சியர்  வெங்கட பிரியா தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ச.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, கோட்டாட்சியர் நிறைமதி சந்திர மோகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் தி.சங்கீதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்