தொழில் திறனை கண்டறிந்து - சிறையிலேயே கைதிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் : சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

சிறை கைதிகளின் தொழில் திறனை கண்டறிந்து அதற்கான பயிற்சிகள் சிறையிலேயே அவர்களுக்கு வழங்கப்படும் என சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் கூறினார்.

வேலூர் சிறைத்துறை டிஐஜியாக பணியாற்றி வந்த ஜெயபாரதி திருச்சி சிறைத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, வேலூர் சிறைத்துறை டிஐஜியாக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டு அவர் கடந்த 20-ம் தேதி வேலூர் சிறைத் துறை டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, ‘‘பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு வருவோர்கள் மனம் திருந்தி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாத வகையில் பல வழிகாட்டு நெறிமுறைகள், பயிற்சிகள் சிறையிலேயே அளிக்கப்படுகிறது.

சிறையில் கைதிகளுக்கு தியானம், யோகாசனம், மனதை ஒரு நிலைப்படுத்துதல், மூச்சுப் பயிற்சி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படு கின்றன. அது மட்டுமின்றி ஒவ்வொரு கைதியின் தொழில் திறன் என்ன என்பதை கண்டறிந்து அந்த தொழிலில் அவர்கள் மேலும் சிறப்பாக செயல்பட போதுமான கூடுதல் பயிற்சிகள் சிறையிலேயே அளிக்கப்படுகிறது.

தேவையான ஆலோசனைகள்

இங்கு திறமையாக பயிற்சி பெறும் சிறை கைதிகள் வெளியே சென்ற உடன் தங்களது தொழில் மீது கவனம் செலுத்தி சமுதாயத்தில் சகஜ நிலைக்கு திரும்பவும், மற்றவர்களை போல அவர்களும் சமுதாய பொறுப்புடன் வாழ தேவையான ஆலோசனைகள் சிறையில் வழங்கப்படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்