அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் கருத்தரங்கம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக மேலாண்மைத் துறையில், முதுநிலை மாணவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த பில்வுட்வேர்டு என்பவர், “தலைமைப் பண்புக்கான அடிப்படை நிர்ணயங்கள்” என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

மேலும், தலைமைப் பண்பின் மேம்பாட்டுக்கான கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அதுதொடர்பாக கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பபட்டது.

பேராசிரியர் முனைவர். ச.சுரேஷ் வரவேற்றார். கல்லூரித் தாளாளர் ச.செபாஸ்டியன் பெரியண்ணன் தலைமையுரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். பி.பிலோமிநாதன் மற்றும் கல்லூரி நிர்வாகத் தலைவர் ச.ஆரோக்கியதாஸ் ஆகியோர் கருத்தரங்கில் வாழ்த்துரை வழங்கினா்.

உதவிப் பேராசிரியர்கள் சா.ரோஸிபெல்சியா, ஜெ.எட்வர்ட் ஆகியோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர். துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர். ந.இந்திரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்