ஹெல்மெட் அணிந்து சைக்கிளில் சென்ற மாணவரை பாராட்டிய காவல் ஆணையர் :

By செய்திப்பிரிவு

திருச்சி: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாநகர காவல்துறை சார்பில் அண்மையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது, புத்தூர் பகுதியில் ஹெல்மெட் அணிந்து சைக்கிளில் சென்ற சிறுவனை போலீஸார் நிறுத்தி விசாரித்தபோது, பாலக்கரை மல்லிகைபுரத்தைச் சேர்ந்த ஏலப்பன்-கலையரசி தம்பதியின் மகன் சாமியப்பன் எனவும், 6-ம் வகுப்பு படிப்பதாகவும், தனது தாயார் நடத்தும் பெட்டிக்கடைக்கு பொருட்கள் வாங்க சைக்கிளில் செல்வதாகவும் அச்சிறுவன் கூறினார். மேலும் ஹெல்மெட் அணிவது தலைக்கு பாதுகாப்பு என்பதால், அதை அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டுவதாகவும் கூறினார்.

இதையறிந்த மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் அச்சிறுவன் குறித்து விசாரித்தபோது, நேற்று முன்தினம் அச்சிறுவனுக்கு பிறந்த நாள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுவனை பெற்றோருடன் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்த அவர், அங்கு சிறுவனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட வைத்தார். மேலும் அச்சிறுவனுக்கு புதிதாக சைக்கிள், ஹெல்மெட்டை பரிசாக அளித்தார். அத்துடன் அச்சிறுவனுக்கு ‘நற்கருணை வீரன்’ என்ற நற்சான்றிதழும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது மாநகர காவல் துணை ஆணையர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்