வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மக்களவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், மக்களவை தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த இயந்திரங்களை பயன்படுத்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று வெளியில் எடுக்கப்பட்டன. மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், வட்டாட்சியர் ஜஸ்டின் உடனிருந்தனர்.

கோவில்பட்டி

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்களை எடுத்து, அதில் பதிவாகி இருந்த சின்னங்களை அழிக்கும் பணி நேற்று நடந்தது. கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 mins ago

ஆன்மிகம்

14 mins ago

ஆன்மிகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்