தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் கட்டுப்படுத்த உபாசி வேளாண் மையம் அறிவுரை

By செய்திப்பிரிவு

தேயிலை சாகுபடியில் தரம், மகசூலை உயர்த்தவும், சிவப்பு சிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்தவும் தேயிலை வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை குறைந்து, பனியின் தாக்கமும், சராசரி வெப்பமும் அதிகரித்துள்ளது. தேயிலைத் தோட்டங்களில் நிழல் மரங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால், தேயிலைச் செடிகளில் முதிர்ந்தஇலைகளின் அடியில் சிவப்பு சிலந்தி தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் வேகமாக குறைந்து வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை, இலை, பைகள் மற்றும் கால்நடைகள் மூலமும் சிவப்பு சிலந்தி தாக்குதல்பரவ வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு ‘உபாசி’ ஆராய்ச்சி மையம் அறிவுரை வழங்கியுள்ளது.

தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.பாலாஜி கூறும் போது, ‘‘தேயிலைச் செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்த, சல்பர், ப்ராபார்கேட், பாரபீனிக் ஆயில் பயன்படுத்துவது அவசியம். வேர்களின் வளர்ச்சிக்கு, மணிச்சத்து உரத்துடன், முசூரி பாஸ்பேட், ராக் பாஸ்பேட், சிட்ரிக் அமிலத்துடன் கலந்து, தழை சாம்பல் உரக்கலவையுடன் வீச்சு முறையில் இடவேண்டும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இலைகளின் நீராவிப் போக்கை கட்டுப்படுத்தி வறட்சியின் பாதிப்பை தாங்க, உரம், யூரியா, மூரியேட் ஆப் பொட்டாஷ், கிரீன் மிராக்கிள் ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து தெளிக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்