அதிர்ஷ்ட கற்கள் விற்பனை மோசடி பொள்ளாச்சியில் 22 பேர் கைது

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் ரியாஸ்(30). இவர் மொபைல் போன் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். ரியாஸின் நண்பர்களான உசிலம்பட்டியை சேர்ந்த மூக்கையா (44), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்குமார் (39), திருப்பூரைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி (36) ஆகியோர் ரியாஸை சந்தித்து, தாங்கள் அதிர்ஷ்ட கற்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், அதிர்ஷ்ட கற்களை வீட்டில் வைத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் கூறியபடி, ரியாஸ் தன்னிடம் இருந்த ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு பொள்ளாச்சி-மீன்கரை சாலை குஞ்சிபாளையம் பிரிவில் உள்ள மயானத்துக்கு சென்றுள்ளார்.

அதிர்ஷ்ட கல்லை காண்பிக் காததால் ரியாஸுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதைகண்ட பொதுமக்கள் நான்கு பேரையும் பிடித்து பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மூக்கையா, ராஜ்குமார், அப்பாஸ் மந்திரி ஆகியோரிடம் போலீஸார் நடத்திய விசாரணை யில், இவர்களுடன் கேரளாவை சேர்ந்த 19 பேர் தொடர்பில் இருப்பதும், அவர்கள் பொள்ளாச்சி வந்து மோசடி செய்ய முயற்சித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து எர்ணாகுளத்தை சேர்ந்த நவீன் ஆனந்த், சந்திரன், சந்தோஷ், சோஜன், மலம்புழாவை சேர்ந்த நூர்தீன், கொச்சியை சேர்ந்த ரீத்தீஷ் அஜிஸ் பட்டேல், கோழிக்கோட்டை சேர்ந்த சுதீஷ், சுனில், பைசல், அனில்குமார், சந்தோஷ், தினேஷ், இசாக், விஷ்ணு, அட்சை, பாசில், வயநாட்டை சேர்ந்த அனுப், சுனில், ஆலாப்புழாவை சேர்ந்த வினோத் ஆகியோர் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பதுங்கி இருந்தபோது போலீஸார் அவர்களை நேற்று கைது செய்தனர். மூக்கையா, ராஜ்குமார், அப்பாஸ் மந்திரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

15 mins ago

உலகம்

37 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

40 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்