தொடர் விபத்து நிகழும் சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து பழநி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் இருந்து ஐஸ்வர்யா நகர் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இந்த இடத்தில் நான்கு புறத்தில் இருந்தும் வாகனங்கள் சாலையை கடப்பது வழக்கமாக உள்ளது. எந்தவித வேகக்கட்டுப்பாடுகளும், போக்குவரத்து போலீஸாரின் பாதுகாப்பும் இல்லை. இதனால், அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "யுகேபி நகர், செல்லம் நகர், இந்து நகர், காந்தி நகர் பகுதிகளில் இருந்து வருவோர் ரோட்டரி பள்ளி சந்திப்பை அடைந்து, அங்கிருந்து பொள்ளாச்சி, பழநி சாலையை அடைகின்றனர். அதேபோல பழநி, கொழுமம் சாலை வழியாக வருவோர் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல, அதே ரோட்டரி பள்ளி சந்திப்பை கடந்து செல்ல வேண்டும். மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து வருவோர்  நகர், ராஜலட்சுமி லே-அவுட், பெரியார் நகர் செல்ல, அதே சந்திப்பை கடந்து செல்கின்றனர். அந்த நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, வேகத்தடை ஏற்படுத்தவும், போக்குவரத்து போலீஸார் மூலமாக கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்