மின்வாரியத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி கடன் மத்திய அரசு நிறுவனங்கள் வழங்கின

By செய்திப்பிரிவு

தமிழக மின்வாரியத்துக்கு, மத்திய அரசின் பவர் ஃபைனான்ஸ் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் நிறுவனம் ரூ.11 ஆயிரம் கோடி கடன் வழங்கி உள்ளன.

தமிழகத்தின் தினசரி மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மின்வாரியம் தனது மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தைத் தவிர,மத்திய அரசுக்குச் சொந்தமானமற்றும் தனியார் மின்நிலையங்களில் இருந்தும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது. இதற்கான பணத்தை மின்வாரியம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டுமார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட கரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் செயல்படவில்லை. இதனால், மின்சார விற்பனை பாதித்து, மின்வாரியத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, மின்சாரம்விநியோகம் செய்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக, மின்வாரியங்களுக்கு சிறப்புக் கடன்திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், மின்சாரம் விநியோகம் செய்த நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகை வழங்க, மின்வாரியம் ரூ.32 ஆயிரம்கோடி கடன் கேட்டு மத்திய அரசின் பவர் ஃபைனான்ஸ் நிறுவனம், ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் ஆகியநிறுவனங்களிடம் விண்ணப்பித்தது. இதைத்தொடர்ந்து, ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் நிறுவனம் ரூ.17,830 கோடியும், பவர் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.12,400 கோடியும் கடன் வழங்க ஒப்புதல் அளித்தன.

முதற்கட்டமாக, பவர் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.4,359 கோடியும், ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் நிறுவனம் ரூ.6,645 கோடியும் வழங்கிஉள்ளன. இத்தொகை மின்விநியோக நிறுவனங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்