மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பின்பும் மதுக்கடை மூடப்படாததைக் கண்டித்து மக்கள் மறியல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் முருகம்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூட ஆட்சியர் விதித்த காலக்கெடு முடிந்தும் கடையை மூடாததைக் கண்டித்து நேற்று சாலைமறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

திருப்பூர் முருகம்பாளையம் ஊரின் மையப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லாததால், டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டிசம்பர் 29-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடையை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். அதில் 15 நாட்களில் முருகம்பாளையம் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடந்த 13-ம் தேதி காலக்கெடு முடிந்த நிலையில் நேற்றும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடந்தது. இதைக் கண்டித்து கடையின் முன்புள்ள சாலையில் அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது,

ஆட்சியரின் கடித நகலைக் காட்டி கடையை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

17 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

42 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்