துப்பாக்கி சுடும் போட்டி: மருத்துவ மாணவி முதலிடம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மதுரை சர்வேயர் காலனி மாணவி சி.கவிரக்ஷனா, டெல்லியில் நடந்த அகில இந்திய பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் முதலிடம் பிடித்தார்.

இவர் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கிய இளவேனில் என்ற குஜராத் பெண்ணை மூன்றாம் இடத்துக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளார். இளவேனிலுக்கு குஜராத் அரசு ஆண்டுக்கு பத்து லட்சம் நிதி, 2 பயிற்சியாளர்களை நியமித்து ஊக்குவிக்கிறது. ஆனால், அரசு மற்றும் தனியார் உதவி இன்றி கடந்த 5 ஆண்டுகளாக கவி ரக்ஷனா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று வருகிறார். தற்போது தேசிய அளவிலும் முதலிடம் பெற்றுள்ளார். தமிழக அரசின் விளையாட்டுத் துறை இவரை அங்கீகாரம் செய்து உதவ வேண்டும் என்று அவரது தந்தை டாக்டர் சக்கரவர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்