ராமநாதபுரம் மாவட்ட - புதிய ஆட்சியராக சங்கர்லால் குமாவாத் பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக சங்கர்லால் குமாவாத் பொறுப்பேற்றார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ.யு.சந்திரகலா நீண்ட விடுப்பில் சென்றார். அதனையடுத்து அக்.1-ம் தேதி முதல் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன் பொறுப்பு ஆட்சியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்னை வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்த சங்கர் லால் குமாவாத் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள க்ஹாதுஸ்யாம்ஜி கிராமத்தில் பிறந்தவர். உயிரியல் பாடத்தில் இளங்கலையும், வரலாறு பாடத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். 2010-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சி, கன்னியாகுமரியில் சார் ஆட்சியராக பணியாற்றி உள்ளார். தொடர்ந்து அயல் பணியில் ராஜஸ்தான் மாநிலத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார்.

ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்குள்ள அனைத்து அரசு அலுவலக கதவுகளும் மக்கள் எளிதில் அணுகும் வகையில் திறந்திருக்கும். அரசின் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்