ஈரோட்டில் கழிவுநீரை வெளியேற்றிய 4 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு :

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோட்டில் கழிவுநீரை வெளியேற்றிய நான்கு ஆலைகளின் மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு, சுப்ரமணியம் நகர், பாவை தண்ணீர்பந்தல்பாளையம் மற்றும் பிராமண பெரிய அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த நான்கு சலவைத் தொழிற்சாலைகள், அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமல் இருந்ததும், சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை அருகிலுள்ள சாக்கடைக் கால்வாயில் வெளியேற்றியதும் மாசுக்கட்டுப்பாடு வாரிய ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அத்தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், பிரிண்டிங் மற்றும் சைசிங் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு நிலையத்தையும் தொடர்ந்து முறையாக இயக்க வேண்டும். தொழிற்சாலைக் கழிவுநீரை, நீர்நிலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலைகள், திடக்கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டும் வாகனங்கள் மீதும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மூலம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்