விதிமீறல்களில் ஈடுபட்ட - 75 கனரக சரக்கு வாகனங்களுக்கு அபராதம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில், அவர்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையரகம் சார்பில், துறைமுகம், திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் நேற்று முன்தினம் கனரக வாகனங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய்வாளர்கள் ஆகியோர், வாகனங்களில் ஆய்வுமேற்கொண்டனர். இதில், அதிகபாரம் ஏற்றிய 33 வாகனங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 75 கனரக சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சாலை வரிசெலுத்தாமல் இயக்கப்பட்ட 10 கனரக சரக்கு வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன. வாகன சாலைவரியாக ரூ.5.85 லட்சம், அபராதமாக ரூ.12.03 லட்சம் வசூலிக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

49 mins ago

ஜோதிடம்

24 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

மேலும்