கோவை பூம்புகார் விற்பனையகத்தில் - கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

நவராத்திரியை முன்னிட்டு, கோவை பெரிய கடை வீதியில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில், கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக, பூம்புகார் மேலாளர் கி.ரொனல்டு செல்வஸ்டின் கூறும்போது, ‘‘இக்கண்காட்சி அக்டோபர் 20-ம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். கண்காட்சியில் தசாவதாரம் செட், விநாயகர் செட், அத்திவரதர், தர்பார் செட், அஷ்டலட்சுமி செட், மும்மூர்த்தி செட், கிரிவலம் செட், கருட சேவை, திருப்பதி, குபேரன், வைகுண்டம், மைசூர் தசரா, வாசு தேவர் உள்ளிட்ட செட் வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாமல்லபுரம் செட், உழவர் சந்தை செட், ஜல்லிக்கட்டு, தஞ்சாவூர் தலையாட்டு பொம்மைகள், துலாபாரம், அரசியல் தலைவர்கள், மரபாச்சி பொம்மைகள், நடை வண்டி, சமையல் செட், கொலு பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பொம்மைகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. பல விதமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சியின் மூலம் ரூ.50 லட்சத்துக்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

59 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்