சுகாதாரமாக உணவு தயாரியுங்கள் : ஹோட்டல் சங்கத் தலைவர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

உணவகங்களை சுத்தமாக பரா மரித்து, சுகாதாரமாக உணவு களைத் தயாரித்து வழங்க வேண் டும் என்று மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தற்போது கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் நிலையில், உணவகங்களை சுத்தமாக, பாது காப்பாக வைத்திருப்பது உணவக உரிமையாளர்களின் கடமை. கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஒரு அசைவ உணவகத்தில் சாப்பிட்ட ஒரு சிறுமி உயிரிழந்ததும், பலர் பாதிப்புக்குள்ளானதும் வருந்தத் தக்கது. அதனைத் தொடர்ந்து பல் வேறு உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

உணவகங்கள் சேவை சார்ந்த அதி அத்தியாவசியமான துறை என்பதைக் கவனத்தில் கொண்டு உரிமையாளர்கள் எச்சரிக்கை யோடு உணவகங்களை கையாள வேண்டும்.

உணவுத்துறை அதிகாரிகளும் ஓரிடத்தில் நடந்ததை மட்டும் வைத்து அனைத்து உணவகங் களையும் சிரமப்படுத்தாமல், உரியகால அவகாசத்துடன் நோட்டீஸ் வழங்கி ஆய்வு செய்து சேவைத்தொழிலுக்கு உரிய அங் கீகாரமும், ஆலோசனையும் வழங்கி தடையின்றி தொடர ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்