ரயில் நிலையங்களில் தூய்மை குறித்து விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

ரயில்கள், ரயில் நிலையங்களில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை திட்டத்தை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொதுமக்கள், ரயில் பயணிகளின் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், இத் திட்டத்தை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் காணொலியில் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், ரயில்வே அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதேபோல், சென்னை ரயில் கோட்ட மேலாளர் கணேஷ், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூய்மை வார திட்டத்தை நேற்றுதொடங்கி வைத்தார். ‘பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்போம்’ என்ற பேரணி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை ரயில் நிலைய வளாகத்தில் குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன. ரயில்வேக்குசொந்தமான குடியிருப்புகள், பணிமனைகள்,தொழிற்சாலைகளில் மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்