பள்ளிகள் திறப்பு காரணமாக - மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

By செய்திப்பிரிவு

பள்ளிகள் திறப்பு காரணமாக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னை கிண்டி மடுவின்கரையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழாவை அமைச்சர்மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இதில், குடிநீர் வழங்கல் துறை தலைமைப் பொறியாளர் ஆர்.நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமாக மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் மட்டும்148 இடங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 25 நீர்நிலைகள், ரூ.200 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 10.94 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் 8 லட்சத்து 24 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தனித்தனியே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 லட்சம் குடியிருப்புகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் தனித்தனியே குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

திருமுல்லைவாயில் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவிரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் தண்ணீர்த் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 1-ம் தேதி பள்ளிகள் திறந்தவுடன்தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்றுஏற்பட்டது என்பது தவறான கருத்து.அவர்களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால்தான், தற்போதுதொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

9 மாவட்டங்களில் அதிகரிப்பு

கேரள எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது, 9 மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்துவதற்காக, கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம். இந்த 9 மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி போடத் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல, கேரளாவிலும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், தினசரி தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.

தசை சிதைவு நோயால் தமிழகத்தில் 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து மருத்துவர்களை வரவழைத்து, சிகிச்சை அளிப்பதற்கு ரூ.16 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

இந்தியாவில் எங்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை. கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் 17 முதல் 18 வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் பேசியுள்ளோம். இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்