திருச்செந்தூர் முருகன் கோயிலில் - ஆக.8-ம் தேதி வரை பக்தர்களுக்கு தடை :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் ஆகிய கோயில்களில் ஆகஸ்ட் 1, 2, 3 மற்றும் 8-ம் தேதிகளில் பக்தர்கள் தரிசனம்செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோயிலில் முக்கிய விழாக்கள் நடைபெறக்கூடிய ஆகஸ்ட் 2, 3, 6, 8, 10 மற்றும் 13-ம் தேதி ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

மேலும், ஆகஸ்ட் 4-ம் தேதி (இன்று) முதல் வரும் 8-ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவருவதால், கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்களிலும் இன்று (ஆக.4) முதல் 8-ம் தேதி வரை அனைத்து நாட்களும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

அதேநேரத்தில் கோயிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்