கொடைக்கானல் மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் : 5 கி.மீ., தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

By செய்திப்பிரிவு

கொடைக்கானலுக்கு நேற்று அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இதனால் மலைச்சாலை யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் காத்திருந்தன.

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படாத நிலை யிலும், வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

நேற்று காலை முதலே கொடைக் கானல் மலைச்சாலையில் அதிக வாகனங்கள் சென்றன. கொடைக் கானலின் நுழைவுவாயிலான டோல்கேட் முதல் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் காத்திருந்து ஊர்ந்து சென்றன.

கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் மலைகிராமங்களான பூம்பாறை, கூக்கால், மன்னனூர் பகுதிகளுக்குச் சென்று இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் போக்குவரத்தை சரிசெய்ய கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்