கரோனா விதிகளை பின்பற்றாததால் - 26 கடைகளில் ரூ.3 லட்சம் வசூல் :

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி சார்பில், தியாகராய நகர் மற்றும் பாடி பகுதிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 26கடைகளில் இருந்து நேற்று ஒரேநாளில் அபராதமாக ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக வணிகர்களுக்கு ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தியாகராயநகர் மற்றும் பாடி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது இரு பகுதிகளிலும் 26 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ. 3 லட்சத்து 33 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் ஜூலை 9-ம் தேதி வரை கரோனாவிதிகளை பின்பற்றாத 6,130 நிறுவனங்களிடமிருந்தும் 30,755 தனிநபர்களிடமிருந்தும் ரூ.3 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரத்து 790 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்