கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 1.33 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இது வரை 1.33 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகங்கள் மூலம்2,94,789 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மேலும், பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 418 பேருக்குபோடப்பட்டுள்ளது. முகக்கவசம்அணியாதவர்கள், தனிமைப் படுத்தல் விதிமுறை மீறியவர்கள்,பொது இடங்களில் எச்சில் துப்பியவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களி லிருந்து அபராதமாக ரூ.78 லட்சத்து86 ஆயிரம் 200 வசூலிக்கப் பட்டுள்ளது.

மாவட்டத்தில் தற்போது 3118 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் 99 பேரும், ஓசூர் இஎஸ்ஐ மருத்துவ மனையில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 331 பேரும், வெளி மாவட்டம், மாநிலங்களில் 43 பேரும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களான பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் 143 பேரும், ஓசூர் பட்டு வளர்ச்சி துறை பயிற்சி சிறப்பு மையத்தில் 13 பேர், வீடுகளில் தனிமையில் 2466 பேர் உட்பட மொத்தம் 3 ஆயிரத்து 118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக் கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடை பிடித்தும் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்என அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்